நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தி.மு.க மேயர் உமா மகேஸ்வரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின், மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
அப்போது மெட்ரோவில் பயணித்த பயணிகளிடம் குறைகளைக் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மு.க.ஸ்டாலின், “ முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தி.மு.க எடுத்துக்கொண்ட முயற்சிகளை எண்ணி பெருமிதம் அடைவதாகவும். அதற்காக நான் ஜப்பான் சென்று நிதியுதவி பெற்று வந்தேன்.
ஆனால் தற்போது இந்த மெட்ரோ ரயிலில் அதிக கட்டணத்தால் பணிநேரங்களில் மட்டுமே அதிகமானோர் பயணிப்பதாகவும், மற்ற நேரங்களில் கூட்டம் குறைவாக உள்ளது என தகவல் வந்தது. அதனை ஆய்வு செய்வதற்காக தான் தற்போதும் மெட்ரோவில் பயணித்தேன்” என தெரிவித்துள்ளார்.