ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு வருட சிறைத் தண்டனையும், 10ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிராக போதுமான ஆராதங்கள் இல்லாத நிலையிலும், சட்டவிரோதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார் வைகோ.
தேச துரோக குற்றச்சாட்டுகளுக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் யூகங்களின் அடிப்படையிலேயே நான் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டுள்ளேன். தந்தை பெரியாரை கேட்டது போல அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என கேட்டிருந்த நிலையில், குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பின்னர் அந்த பத்தியை நீக்கியுள்ளார். தீர்ப்பு எழுதிய பின் அதை திருத்திய நீதிபதியின் இந்த செயல்பாடு குற்ற விசாரணை நடைமுறை சட்டத்திற்கு எதிரானது.
2009ம் ஆண்டு மே 19ம் தேதி தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருந்தார் என்பதற்கோ, அதனால் தமிழக மக்களின் மனநிலை ஆவேச நிலையில் இருந்தது என்பதற்கோ, மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது என்பதற்கோ எவ்வித ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்யவில்லை.
ஆனால் நீதிபதி கவனத்திற்கு வந்த தகவல்களின் அடிப்படையிலும், அனுமானத்தின் அடிப்படையிலும் நீதித்துறை சார்ந்த முடிவுகள் எடுக்கப்படக்கூடாது. ஆனால் இதுபோன்ற காரணிகள் நீதிபதியின் மனதில் கோலோச்சியதால்தான் குற்றவாளி என கண்டறியப்பட்டு அதனடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளேன். எனவே என் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீடு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.