தமிழ்நாடு

ஆணவக்கொலைகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? : உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் ஆணவக்கொலைகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆணவக்கொலைகளை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? : உயர்நீதிமன்றம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆணவக் கொலைகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கைக் கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் உயிரை உலுக்கும் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும், தமிழகத்தில் அதிகளவில் ஆணவக் கொலைகள் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாதி அடிப்படைவாதிகளின் வறட்டுப் பெருமைகளுக்காக நிகழ்த்தப்படும் ஆணவப் படுகொலைகள் சமூகத்தைச் சீர்குலைக்கின்றன.

ஆணவக் கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக நாளிதழில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் ஆணவக் கொலை வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணி பிரசாத் அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கடந்த ஆண்டு ஆணவக் கொலை தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்றி உள்ளீர்கள் என மத்திய - மாநில அரசுகள் வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், ஆணவக் கொலைகள் தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு சட்டத்தின் நிலை என்ன என்பதை விளக்கவேண்டும் எனவும், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்று, ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வழக்கில் தமிழக அரசைக் குட்டிய உயர்நீதிமன்றம் மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றவேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பிக் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தமிழக அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்துக் கண்டித்து வருகிறது உயர்நீதிமன்றம்.

banner

Related Stories

Related Stories