தமிழ்நாடு

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக விமானத்திலிருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க் !

கோவையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக விமானத்தின் கூடுதல் பெட்ரோல் டேங்க் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக விமானத்திலிருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கோவை மாநகரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்-21 ரக விமானம் ஒன்று பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானமானது கோவை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இருகூர் பகுதியில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் பெட்ரோல் டேங்க் திடீரென கழன்று விழுந்தது.

தரையில் விழுந்த பெட்ரோல் டேங்க் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், எரிந்த பெட்ரோல் டேங்க்கை அணைத்தனர். இதற்கிடையில் நிலைமையை சுதாரித்துக்கொண்ட விமானி, பயிற்சி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் சுமார் 3 அடி ஆழத்திற்கு நிலத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும், தகவல் அறிந்த சூலூர் விமானப்படை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மிக்-21 ரக விமானம் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories