தமிழ்நாடு

கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய தாழி : வியந்த சுற்றுலா பயணிகள்!

மதுரை கீழடியில் கண்டடெடுக்கப்பட்ட பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழியைக் கண்டு அகழாய்வு பணியை பார்வையிட வந்த மதுரை மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

 கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய தாழி : வியந்த சுற்றுலா பயணிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 4 கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது.

நேற்று (திங்கள்கிழமை) தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ளும் போது வட்டவடிவிலான பெரிய தாழி கிடைத்தள்ளது. இதற்கு முன்னதாக இங்கு நீளமான இரட்டைச் சுவர், பல்வேறு வடிவிலான பானைகள் என 6,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய தாழி : வியந்த சுற்றுலா பயணிகள்!

கீழடியில் அகழாய்வுப் பணி தொடங்கியல் இருந்து அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கீழடி ஆய்வு பணிகளை பார்வையிட்டுச் செல்வார்கள். அதேபோல பார்வையிடச் சென்றவர்கள் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தாழியை கண்டு வியந்து புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், மதுரை மக்களவை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் இதுகுறித்து பல்வேறு தகவல்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். நாளிதழ்களில் அந்தச் செய்திகளை பார்த்தும் மக்கள் இங்கு கூடுவதாகக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories