தமிழ்நாடு

ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக: சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ வலியுறுத்தல்

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர் சுரேஷ் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக: சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ வலியுறுத்தல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த ஜனவரி மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாணவர்களின் கல்வி நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர். ஆனால், எடப்பாடி அ.தி.மு.க அரசோ, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 1355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் மற்றும் 208 அரசு ஊழியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் பதவி உயர்வு போன்ற அரசின் சலுகைகள் கிடைக்கப்பெறாமல் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தி.மு.க. உறுப்பினர் சுரேஷ் ராஜன் வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories