வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கும் வட தமிழகமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் மழைக்கு வாய்ப்பு என்றும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், காற்றின் திசை மாறினால் ஜூலை 11 முதல் 15 வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.