இன்றைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும், எல்லா தரப்பினருக்கும் அவசியமானது உடற்பயிற்சி. வெகுவாக மாறிய வாழ்க்கை முறைகளால் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கும் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார். சென்னை மாரத்தானுக்கு ஆதரவு தந்து முன்னின்று நடத்துவதிலும் பங்காற்றி வருகிறார்.
இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவரது நண்பர் துரைப்பாக்கம் ஹரிகிருஷ்ணனுடன் புனேவில் 22 கிலோ மீட்டர் தூர நடையோட்டம் மேற்கொண்டிருக்கிறார் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.
60-வயதைத் தொட்டிருக்கும் மா.சுப்பிரமணியன், கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோயாலும், நொறுங்கிப் போன வலதுகால் மூட்டின் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்தாலும், தொடர்ந்து இது போன்ற சாதனை ஓட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அவரது அயராத நம்பிக்கைக்கும், முயற்சிக்கும் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.