விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், '' தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசு தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை இல்லை சொல்லி வருகிறது. தமிழக அரசு குடிநீர் தட்டுபாடு இல்லை என கூறுவது வேதனையான விஷயம் , கேரள முதல்வர் பினராய் விஜயன் இரயிலில் தமிழகத்திற்கு தண்ணீர் அனுப்பி வைக்க முன் வந்தும் , தமிழக அரசு வரட்டு கௌரவத்தால் வேண்டாம் என தெரிவித்தது . அண்டை மாநிலங்களை உதவியை பெற்று தமிழக அரசு தண்ணீர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில் சமீப காலமாக ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. சாதி வெறி அமைப்புகளால் ஆணவ கொலைகள் நடைபெறுகிறது , இதே போல தான கனகராஜ் - வர்ஷிநி பிரியா கொலை நடந்துள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. ஆணவ கொலைகளை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆணவ கொலைகளை தடுக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன், இதற்கு ஒரு தனி சட்டம் இயற்றப்பட வேண்டும்.
தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைந்து தேர்தல் நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துக்கள், பெண்கள்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ''பஞ்சாயத்து ராஜ்'' சட்டம் கொண்டு வரப்பட்டது.
மேலூரில் 144 தடை உத்தரவு வழக்கத்திற்கு மாறான உத்தரவாக பார்க்கின்றோம் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேகசன் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தவர்களுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தும் நிலையில் 144 தடை உத்தரவு தேவை இல்லை
தேசிய கல்வி கொள்கை மிகவும் ஆபத்தானது. மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக செயல்படுத்த நினைக்கிறது. தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தியாவை காவி மயமாக்க பாஜக அரசு முனைகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வருகின்ற திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் '' இவ்வாறுக் கூறினார்.