தமிழ்நாடு

ஒரே குடும்ப அட்டைத் திட்டம்: தமிழக அரசு துணிச்சலாக எதிர்க்க வேண்டும்! கி.வீரமணி வலிறுத்தல்

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை தமிழக அரசு துணிச்சலாக எதிர்க்க வேண்டும். ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டி விடக்கூடாது என தமிழக அரசுக்கு கி.வீரமணி வலிறுத்தியுள்ளார்.

ஒரே குடும்ப அட்டைத் திட்டம்: தமிழக அரசு துணிச்சலாக எதிர்க்க வேண்டும்! கி.வீரமணி வலிறுத்தல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமீபத்தில் டெல்லியில் மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறைக் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது."ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற திட்டமிட்ட வரிசையில், ஒரே ரேஷன் கார்டு என்பதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை ஒழித்து, மாநில உரிமைகளை பறித்து, ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.

மேலும், தமிழக அரசு இந்த பிரச்சினையில் தன்னுடைய நிலைப்பாடு என்னவென்பதை தெளிவுபடுத்தி, இந்த திட்டத்தை துணிச்சலாக ஏற்க மறுக்கவேண்டும். ‘ஆமாம் சாமி’ போட்டு தலையாட்டி விடக்கூடாது.

தமிழகத்தின் உணவு உரிமை என்பதைவிட நம்முடைய மாநிலத்தின் உரிமை பிரச்சினை என்பதால் தெளிவுடனும், துணிவுடனும் நடந்துகொள்ள வேண்டும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories