தமிழ்நாடு

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... ‘குட் நியூஸ்’ சொன்ன வானிலை ஆய்வு மையம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... ‘குட் நியூஸ்’ சொன்ன வானிலை ஆய்வு மையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும் தேனி, நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை / இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம், வேலூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சென்னையின் நகர்ப் பகுதிகளில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories