தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து விவசாயிகளின் விளைநிலங்கள் மற்றும் பொதுமக்களின் நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நில அளவீடு பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் போகம்பட்டியில் உள்ள விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இதனைக் கண்ட அப்பெண்ணின் மகள், தனது தாயை கைது செய்ததை கண்டிக்கும் வகையில் அழுது புலம்பித் தீர்க்கும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.