தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கை அறிக்கை நகல்களை எரித்து மாணவர்கள் போராட்டம்!

மத்திய அரசு பரிந்துரைத்த புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை எரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கை அறிக்கை நகல்களை எரித்து மாணவர்கள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை உள்வாங்கி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019’யை அண்மையில் வெளியிட்டது.

இந்த கல்விக் கொள்கையில் இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது என தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தர்.

இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது ஜூன் 25 தமிழகம் முழுவதும் புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டத்தின் நகல்களை எரிக்கும் போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை அறிக்கை நகல்களை எரித்து மாணவர்கள் போராட்டம்!

இதனையடுத்து இன்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதியில் நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது மாணவர் சங்கத்தினர் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி நகல்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் மாணவர்கள் நகல்களை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் தடுக்க முயன்றதால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories