தமிழ்நாடு

கீழடி அகழ்வாய்வில் பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!

கீழடியில் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழாய்வின் போது பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கீழடி அகழ்வாய்வில் பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டில் ஆய்வு தொடங்கப்பட்டது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் இதுவரை 4 கட்ட அகழாய்வுகள் முடிந்துள்ளன. ஜூன் 13-ம் தேதி ஐந்தாம் கட்ட பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்தப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் கீழடியில் தோண்டப்பட்ட குழியில் 12 அடி நீளத்திலும் ஒரு அடி அகலத்திலும் பழங்கால இரட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சுவர் முழுதாகவும் மற்றுமொரு சுவர் 5 அடி நீளத்தில் மட்டும் உள்ளது. இந்தச் சுவர் கட்டிடத்தின் மேல் பகுதியா, கீழ்ப் பகுதியா என்று தற்போது வரை தெரியவில்லை.

சுவரின் அடிவரை தோண்டி எடுக்கப்பட்ட பின்னர்தான் கட்டிடத்தின் முழுமையான வடிவமைப்பைக் கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த இரட்டைச் சுவரை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

banner

Related Stories

Related Stories