தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் Junior Scientific Officer வேலைக்கு 64 காலிப்பணியிடங்களை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம். வேதியியல் பிரிவில் 40 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு, Organic Chemistry, Inorganic Chemistry, Physical Chemistry, Analytical Chemistry, Applied Chemistry, Polymer ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்க விண்ணப்பிக்கலாம்.
உயிரியல் பிரிவில் 14 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு, Botany, Zoology, Bio-Chemistry, Micro Biology, Bio Technology, Genetics ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல் பிரிவில் 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு, இயற்பியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Computer Forensic Science துறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் 4 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு, Chemistry, Computer Science, Physics மற்றும் Forensic Science பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது உச்சவரம்பு கிடையாது. இதர பிரிவினருக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரைக்கும் ஊதிய விகிதம் அளிக்கப்படும்.
எழுத்து தேர்வு ஆகஸ்ட் 24ம் தேதி நடைபெறும். www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 22.