தமிழ்நாடு

மண்ணைக் காக்க மனிதச் சங்கிலி போராட்டம்! 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் தொடங்கி ராமேஸ்வரம் வரை - 598 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனிதச் சங்கிலி போராட்டம்! 

மண்ணைக் காக்க மனிதச் சங்கிலி போராட்டம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் தொடங்கி ராமேஸ்வரம் வரை சுமார் 598 கி.மீ. தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 3 லட்சம் பேர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஏற்கனவே வேதாந்தா நிறுவனத்திற்காக எடப்பாடி அரசு, காவல்துறை என்ற பெயரில் கூலிப்படையை ஏவி, சுற்றுச்சூழல் அழிவிலிருந்து மக்களை காக்கப் போராடிய 13 பேரை சுட்டுக்கொன்றது. தற்போது அதே வேதாந்தா நிறுவனத்திற்கும் மற்றும் ONGC நிறுவனத்திற்கும் கிட்டத்தட்ட 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான உரிமத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஒட்டுமொத்த தமிழகமும் தண்ணீர் பஞ்சத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கான போர்க்கால நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல், தமிழகத்தை பாலைவனமாக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது மத்திய பாசிச பா.ஜ.க அரசு.

banner

Related Stories

Related Stories