தமிழ்நாடு

முதல்வரின் ஊரில் ராட்சத குடிநீர்குழாய் உடைந்து 8மணி நேரமாக தண்ணீர் வீணாக்கப் போகும் அவலம்!

சேலத்தில் குடிநீர் கொண்டு செல்லும் பிரதான ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் எட்டு மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாகி சாலையில் குளம்போல் தேங்கியும் சாக்கடையில் கலந்து வீணாக போகிறது.

முதல்வரின் ஊரில் ராட்சத குடிநீர்குழாய் உடைந்து 8மணி நேரமாக தண்ணீர் வீணாக்கப் போகும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் பொதுமக்கள் அதிகப்படியான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஐடி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்ட சூழல் உருவாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு சார்பில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விளக்கமளித்திருந்தார் .ஆனால், தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு எத்தகைய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. மக்கள் இன்னும் தண்ணீர் தேடி அழைக்கின்றார். அவர்கள் வேதனையுடன் தான் உள்ளார் என்பதை நாளுக்கு நாள் செய்திகளின் வாயிலாக தெரியவருகிறது.

மேலும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க போதுமான நடவடிக்கை மேற்கொள்ளதா தமிழக அரசை கண்டித்து தி.மு.க தலைமையில் தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் பகுதியில் குடிநீர் கொண்டு செல்லும் பிரதான ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் எட்டு மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாகி சாலையில் குளம்போல் தேங்கியும் சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது.

முதல்வரின் ஊரில் ராட்சத குடிநீர்குழாய் உடைந்து 8மணி நேரமாக தண்ணீர் வீணாக்கப் போகும் அவலம்!

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் இந்த சாலையில் கடக்கும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சாலையில் பல மணி நேரமாக வீணாகும் இந்த குடிநீரை கண்டு வேதனை அடைந்தனர்.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில்," தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மெத்தன போக்குடன் செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய செயலாக உள்ளது.

அதே சமயம், மாநிலம் முழுவதும் மழை வேண்டி யாகம் நடத்த செலவிடும் தொகையை குடிநீர் தேவைகளுக்காக செலவு செய்திருந்தால் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் குடிநீர் குழாய் உடைந்து பல ஆயிரம் லீட்டர் தண்ணீர் வீணாக போயிருக்காது". என அப்பகுதி மக்கள் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதே போல் ஜூன் 17ம் தேதி சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே, குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான ராட்சத குழாய் உடைந்து, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாக போனது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories