கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மற்றும் கரூர் எம்.பி. ஜோதிமணி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, குடிநீர் பிரச்னை தலைதூக்கியுள்ள சமயத்தில் அதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரான தன்னை மாவட்ட ஆட்சியர் அழைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களவை உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் எப்படி ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் எனவும் கேள்வி எழுப்பினார் செந்தில்பாலாஜி.
இதனையடுத்து பேசிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, மக்களின் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான தங்களை மாவட்ட ஆட்சியை புறக்கணிக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.