தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், கடல் காற்று வீசத் தொடங்கியிருப்பதாலும் தமிழகத்தில் சென்னை முதல் நெல்லை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளைச் சேர்ந்த நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 39 டிகிரி செல்ஸியஸும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்ஸியஸும் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு திசைநோக்கி காற்று வீசுவதால், அனல்காற்று படிப்படியாக குறையும், அதேப்போல், காலை நேரத்தில் காற்றின் வேகம் சற்றி அதிகரித்தே காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.