தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து நாட்களுக்கு ஒருமுறை, மிகக் குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது.
ஆனால் அ.தி.மு.க அரசோ, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போன்று காட்சிப்படுத்தி வருவது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் குடிநீர் பிரச்சனையால் மக்கள் பெரும் சிரமத்தில் ஆளாகியுள்ளனர். இதனை அடுத்து பொறுப்பில்லாத அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் நடைபெற்று வருகிறது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோர் காலி குடங்களுடன், குடிநீர் வழங்காத மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது அங்கு போலிஸார் குவிக்கப்பட்டு இருப்பதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.