தமிழ்நாடு

அ.தி.மு.க மோடியின் தலைமையின் கீழ் இயங்குகிறதா ? திருமாவளவன் கேள்வி 

அ.தி.மு.க,.வின் இரட்டை தலைமை என்பது டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமை என்றே புரிந்துகொள்ளமுடிகிறது என அ.தி.மு.கவின் இரட்டை தலைமை விவகாரத்தில் திருமாவளவன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க மோடியின் தலைமையின் கீழ் இயங்குகிறதா ? திருமாவளவன் கேள்வி 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் அ.தி.மு.க கட்சியின் உட்கட்சி பூசல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மேலும் இரட்டை தலைமையை எதிர்த்து அ.தி.மு.க தொண்டர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எம்.பி தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, " தற்பொழுது அதிமுகவில் இரட்டை தலைமை தொடர்பான பிரச்சனை அக்கட்சிக்குள்ளே விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க.,வே காரணம்.

மத்தியில் உள்ள பா.ஜ.க தலையீட்டினால் தான் இரட்டை தலைமை பிரச்சனை பெரும் சர்ச்சையாக உள்ளது. அ.தி.மு.க இரட்டை தலைமை என்பதை டெல்லி தலைமை, மற்றொன்று தமிழக தலைமை என்றே புரிந்துகொள்ள முடிகிறது. பிரதமர் மோடி அ.தி.மு.க.,வை தலைமைத் தங்கி வழிநடத்துகிறார் என்பதே அவர்களை மறைமுகமாக சொல்லும் செய்தி.

அ.தி.மு.க மோடியின் தலைமையின் கீழ் இயங்குகிறதா ? திருமாவளவன் கேள்வி 

தமிழக அரசு சுகந்திரமாக செயல்பட வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். மேலும் மத்திய அரசின் தலையீட்டைத் தடுக்கவேண்டும் என அ.தி.மு.க தொண்டர்களே தற்பொழுது எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பகத்தன்மை இல்லை” என குற்றம்சாட்டினார்.

“நாடாளுமன்றத்தில் தொகுதி பிரச்சனைக்காக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் நாங்கள் ஒன்றிணைந்து குரல்கொடுப்போம். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விராதோ திட்டத்தை அனுமதிக்க கூடாது” என்பதை மக்களவையில் வலியுறுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories