தமிழ்நாடு

பீகாரில் குழந்தைகள் தொடர் மரணம்: ஆலோசனை கூட்டத்தில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட பாஜக அமைச்சர்!

பீகாரில் மூளைக் காய்ச்சல் காரணமாக மக்கள் அதிக அளவில் மரணம் அடைந்த்துள்ளனர். இந்த மரணம் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க அமைச்சர்கள் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் குழந்தைகள் தொடர் மரணம்: ஆலோசனை கூட்டத்தில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட பாஜக அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகாரில் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளில் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது. அதிக காய்ச்சல், வலிப்பு மற்றும் தலைவலி போன்றவை மூளைக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹுட்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது.

கடும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்திக் கொண்டு, வரும் 24ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறைக்கும், பீகார் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பீகார் நிலவரம் குறித்து உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. கடந்த 2 வாரத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணத்தால் மக்கள் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மேலும் இந்த பிரச்சனைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் முசாஃபர்பூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே செய்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் செய்த செயல் குறித்து ஆங்கில ஊடகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டியில், "எத்தனை விக்கெட் இதுவரை விழுந்துள்ளது?" என கேட்டுள்ளார்.

மூளைக்காய்ச்சல் மரணம் குறித்து பொறுப்புடன் இல்லாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது இந்தக் கேள்வி சர்ச்சையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சி மங்கள் பாண்டே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பீகாரில் குழந்தைகள் தொடர் மரணம்: ஆலோசனை கூட்டத்தில் கிரிக்கெட் ஸ்கோர் கேட்ட பாஜக அமைச்சர்!

இதற்கு முன்பு நடந்த மற்றொரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசிக்கொண்டிருக்கையில் மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் தூங்கிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது நான் ஆழ்ந்த சிந்தனையில் யோசித்துக் கொண்டிருந்தேன் என பொறுப்பற்று பேசியுள்ளார்.

பீகாரில் மக்கள் உயிர்கள் பறிபோகிக்கொண்டிருக்கிறது. அவசர நடவடிக்கை எதுவும் எடுக்க அரசு முன்வரவில்லை. இதில் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க அமைச்சர்கள் இப்படி நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

banner

Related Stories

Related Stories