கோடை வெயில் மே மாதம் இறுதியுடன் நிறைவடைந்திருந்தாலும், தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்ச் மலைப்பகுதிகளை தவிர பிற மாவட்டங்களில் வெயில் தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.
இதற்கிடையில், ஃபானி, வாயு போன்ற புயல்கள் வலுப்பெற்றிருந்தாலும் அவை தமிழகத்தில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை தன்னுடனே கொண்டு சென்றுவிட்டது என்றே கூறலாம்.
ஆகையால் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்றே வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகை, உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெயில் பதிவாகும் என்றும், அனல் காற்று வீசும் என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் நிலவும் இந்த அனல் காற்று வருகிற ஜூன் 20ம் தேதிக்கு மேல் குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.