தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாக தொடங்காவிட்டாலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நெல்லை, தேனி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த வாரங்களில் வெப்பச்சலனம் காரணமாகவும், பருவமழை எதிரொலியாகவும் மழைப்பொழிவு இருந்தது.
ஆனால், தற்போது லேசான மழையே பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கான நீர் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது.
அதேச்சமயம், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் விடுத்திருக்கும் அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, நாகை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை 31-41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.