தமிழ்நாடு

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்.. ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடி தலைவிரித்தாடும் நிலையில், 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்.. ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிலத்தடி நீர்மட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 9.12 மீட்டராக இருந்த நீர்மட்டம் 13.77 மீட்டராக சரிந்துள்ளது.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்.. ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இதனையடுத்து, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 9 அடி வரை நீர்மட்டம் சரிந்துள்ளது.

காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 6 அடிவரையிலும் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளது. அதேப்போல், பிற மாவட்டங்களில் 3 அடிவரை குறைந்துள்ளது.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்.. ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், நாகை, திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் சற்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories