மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் 37 எம்.பி.,க்களும் தங்களது சொத்தை விற்றாவது விவசாயk கடன், கல்விக் கடனை அடைக்க வேண்டும்” என்று அவர் கூறினார். அவரின் இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பிய போது அவர் கூறியதாவது, “ முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் தோல்வி அடைந்த விரத்தியில் 37 எம்.பி.,களை இவ்வாறு நையாண்டி செய்யும் விதமாக பேசி வருகிறார்.
இவர்கள் வெற்றி பெற்றபோது பிரதமர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வதாகக் கூறினார். எவ்வளவு வங்கி கணக்கில் அவர்கள் டெபாசிட் செய்தார்கள் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.
அதேபோல் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறினார்கள். அதில் பொன்.ராதாகிருஷ்ணன் எவ்வளவு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். அதற்கான முயற்சி எடுப்பதற்கு இவரின் சொத்தை விற்று எவ்வளவு செலவழித்தார் எனபதையும் அவர் கூறவேண்டும்.
சொத்துக்களை விற்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இவர் பதவியில் இருந்தபோது மக்கள் நலதிட்டத்திட்டதிற்காக பிரதமர் மோடிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினார்” என்று கலாநிதி வீராசாமி கேள்வியெழுப்பி உள்ளார்.