தமிழ்நாடு

சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா? : வானிலை ஆய்வு மையம் பதில்!

நாளை வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா? : வானிலை ஆய்வு மையம் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையும் எனவும், வெப்பச் சலனம் காரணமாக லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி வெயில் முடிந்த பிறகும், தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று வேடசந்தூர், திண்டிவனம் உள்ளிட்ட ஒருசில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கன மழை பெய்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலை சார்ந்த பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories