தமிழ்நாடு

சென்னை மத்திய கைலாஷ் அருகே சாலையில் மீண்டும் ஏற்பட்ட பள்ளம் : பொதுமக்கள் அச்சம் !

சென்னை மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் மிகபெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வார இடைவெளியில் மீண்டும் அதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

சென்னை மத்திய கைலாஷ் அருகே சாலையில் மீண்டும் ஏற்பட்ட பள்ளம் : பொதுமக்கள் அச்சம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்திய கைலாஷ் சிக்னல் சென்னை மாநகரின் முக்கிய சிக்னலாக உள்ளது. சென்னையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பகுதிகளில் மத்திய கைலாஷ் பகுதியும் ஒன்று.ஐ.டி நிறுவனங்கள், ஐ.ஐ.டி மெட்ராஸ்,கவர்னர் மாளிகை என முக்கியமான இடங்களை கொண்டுவிளங்கும் மத்திய கைலாஷ் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைப்பு சாலையாகவும் உள்ளது.

கடந்த மே மாதம் 27ம் தேதி மத்திய கைலாஷ் சிக்னல் அருகே 8 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. ஏற்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை சிமெண்ட் கலவையை கொண்டு சரி செய்தனர். இந்நிலையில், நேற்றிரவு அதே இடத்தில் 10 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மத்திய கைலாஷ் பகுதியில் தொடர்ச்சியாக பள்ளம் திடீரென ஏற்படுவதும் அதனை நெடுஞ்சாசாலைத் துறை தற்காலிக சீர்செய்வதுமாக உள்ள நிலையில் நிரந்தமாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே வாகன ஒட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், பள்ளம் காரணமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories