தமிழ்நாடு

தொடர்ந்து 8வது ஆண்டாக டெல்டா விவசாயிகளை ஏமாற்றும் அ.தி.மு.க. அரசு!

காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் தொடர்ந்து 8வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்யமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை பெற்றுத்தராத அ.தி.மு.க அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து 8வது ஆண்டாக டெல்டா விவசாயிகளை ஏமாற்றும் அ.தி.மு.க. அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்டா மாவட்டங்களுக்கு பிரதான நீராதாரமாக மேட்டூர் அணை இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியிடப்படும் நீரின் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவது வாடிக்கை. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடி இருந்தால் மட்டுமே நீர் திறந்துவிடப்படும். ஆனால், முந்தைய தி.மு.க ஆட்சியின் போது பருவமழை பொய்த்து போனதால் காவிரியில் இருந்து நீரை பெற்றுத்தந்து பாசன வசதிக்கு வழிவகுத்தது.

இதனையடுத்து, ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, டெல்டா மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தருவதில் அலட்சிய போக்கையே இதுகாறும் கடைபிடித்து வருகிறது. இதனால், கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்காக குறித்த தேதியில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டும் நீர் திறக்க அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்தது மட்டுமில்லாமல், அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories