தமிழ்நாடு

தரமற்ற பொறியியல் கல்லூரிகளிடம் லஞ்சம் பெற்றதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

தரமற்ற பொறியியல் கல்லூரிகளிடம் லஞ்சம் பெற்றதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளில் 92 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என சமிபத்தில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா வெளியிடாமல் நிலுவையில் வைத்துள்ளார்.

அந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால் தான் அதில் மாணவர்கள் சேராமல் தடுத்து நிறுத்தமுடியும். எனவே பட்டியலை வெளியிட வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, லஞ்சம் வாங்கிக்கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பெயர் பட்டியலை வெளியிட மறுத்து வருகிறார் என லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்படுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories