தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு நடப்பு கல்வியாண்டு முதல் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடப்புத்தகத்தில் மாற்றம் எதுவும் செய்யாமல், 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப் படுத்துகின்றனர்.
நேற்றையதினம் இந்த புதிய புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விக்கழக தலைவர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 12ம் வகுப்பு பொதுத்தமிழ் பாடபுத்தகத்தின் அட்டை படத்தால் தற்பொழுது சர்ச்சைகள் எழுந்துள்ளது.
அந்த அட்டையின் முகபக்கத்தில் கோவில்கள், பெண் நடனமாடுவது, மற்றும் பாரதியார் தலைப்பாகையுடன் இருக்குமாறு வடிவைக்கப்படுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பாரதியார் ஒவியத்தில், பாரதி காவி வண்ணத்தில் தலைப்பாகை அணிந்துள்ளதுப் போல் உள்ளது. இந்த படத்தை பார்த்ததும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாரதிக்கு காவி வண்ணம் பூசி மத்திய அரசு மட்டமான அரசியல் செய்கிறது என பலரும் சமுக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “இதுவரையிலும் பாரதியாரை யாராவது காவி தலைப்பாகையுடன் பார்த்திருக்கிறார்களா? பாட புத்தகம் மூலம் காவியை திணிக்கும் செயலாக இதை பார்க்க முடிகிறது. மாணவர்கள் மத்தியில் பாரதியாரை பற்றி வேறு கோணத்திலான சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சி நடந்துவருகிறது.
மேலும் நான் நீண்ட காலமாக மாணவர்களுக்கு தமிழ்பாடம் கற்றுக்கொடுத்து வருகிறேன். அவர் எப்போதுமே வெள்ளை தலைப்பாகை அணியும் வழக்கத்தை கொண்டிருந்தார். காவி வணத்தில் தலைப்பாகை அணிந்த படத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை. இதன் அட்டை படத்தில் உள்ள இந்து கோவிலின் படத்தை மட்டும் அச்சிட்டு இருக்கிறார்கள்.
இதனால் இந்துக்கள் மட்டும் தான் தமிழுக்கு பாடுபட்டவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கிறிஸ்தவர்களாக இருந்த வீரமாமுனிவர், ஜி.யூ. போப் போன்றவர்கள் தமிழுக்காக பாடுபட்டு இருக்கிறார்கள். அதேபோல முஸ்லிமான உமறுபுலவரும் தமிழக்கு அரும்பாடுபட்டவர்களில் ஒருவர். என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.