தமிழ்நாடு

கலைஞரின் திருவுருவச் சிலைக்கு முன் இந்தி திணிப்பை எதிர்க்க சபதம் ஏற்போம்: வைகோ அழைப்பு!

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் நினைவிடத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கலைஞரின் திருவுருவச் சிலைக்கு முன் இந்தி திணிப்பை எதிர்க்க சபதம் ஏற்போம்: வைகோ அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவிலும், அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் அருகில் அலங்கரிக்கப்பட்ட திருஉருவ படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி தலைவர்களில் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் நினைவிடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

இந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது, "ஓய்வறியாத டாக்டர் கலைஞர் அண்ணாவின் அருகில் ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வை எஃகு கோட்டையாக கட்டிக்காத்து, இமாலய வெற்றியை நடந்துமுடிந்த தேர்தலில் பெற்று இந்திய உப கண்டத்தை திருப்பி பார்க்க கூடிய அளவுக்கு ஒரு ஈர்ப்பினை தந்திருக்கிறார் தளபதி ஸ்டாலின்.

டாக்டர் கலைஞர் அவர்களின் உணர்வுகள் நெஞ்சில் நிறைந்து இருக்கின்ற நேரத்தில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு அறிவிப்பு என்கின்றனர். கடமை உணர்வோடு 96வது பிறந்தநாள் விழாவில் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன் மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி, இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று சபதம் ஏற்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories