மத்திய அரசு கடந்த 1ம் தேதியன்று புதிய கல்வி கொள்கைக்கான வரைவுகளை வெளியிட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
இந்தி திணிப்பை மேற்கொள்ளும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பின்னர் மீண்டும் வரைவு அறிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டனர்.
இதனையடுத்து நவ நிர்மாண் சேனா கட்சி இந்தி திணிப்பை கண்டித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மகாராஷ்டிர மக்களின் தாய் மொழி மராத்தி. எங்கள் மொழியை படிக்கவும், அதற்கு முன்னுரிமை வழங்கவும் எங்களுக்கு முழு உரிமை உண்டு. எந்த மொழியை தேர்வு செய்து படிப்பது என்பது மக்களின் உரிமை. அதனை அரசு திணிக்க முடியாது. அவ்வாறு செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும்’’ என அதில் தெரிவித்துள்ளனர்.