புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாகப் பேசி, வாட்ஸ்-அப்பில் பரவவிட்டதை அறிந்த மாற்றுச் சமூகத்தினர், தங்களது சமூகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 19ம் தேதியன்று பொன்னமராவதி, குழிபிறை உள்ளிட்ட கிராம மக்கள் சாலையோரம் உள்ள வாகனங்களை அடித்து நொறுக்கியும், ஏராளமான மரங்களை வெட்டிப்போட்டு சாலையை அடைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆகையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. வன்முறைகள் நடக்காமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக, வீடியோ ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வன்முறையில் ஈடுபட்ட 1000 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நள்ளிரவு சமயத்தில் 30 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.