தமிழ்நாடு

ராகுல் தலைவராக நீடிக்க வேண்டி பேரணி நடத்திய தமிழக காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு 

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதிவில் தொடர்ந்து நீடிக்க வலியுறுத்தில் சென்னையில் பேரணி நடத்திய தமிழக காங்கிரஸ் கட்சியினர் 700பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் தலைவராக நீடிக்க வேண்டி பேரணி நடத்திய தமிழக காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பா.ஜ.க எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுத் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 இடங்களிலும் அமோக வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், மோசமான இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் என அரசியல் வட்டாரங்கள் பரபரத்தன.

அவர் பதவியை தொடரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் தலைவராக நீடிக்க வேண்டி பேரணி நடத்திய தமிழக காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு 

இந்நிலையில், ராகுல் தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி சென்னை அண்ணா சாலையில் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ்,பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories