தமிழ்நாடு

பள்ளி ஆசிரியர்கள் 4,001 பேரின் பதவி உயர்வை ரத்து செய்த அதிமுக அரசு!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக்கல்வி ஆசிரியர்களில் 4001 பேருக்கான பதவி உயர்வை அதிமுக அரசு ரத்து செய்துள்ளது

பள்ளி ஆசிரியர்கள் 4,001 பேரின் பதவி உயர்வை ரத்து செய்த அதிமுக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

பின்னர், மாணவர்களின் நலன் கருதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் என பல்வேறு வகையில் நடவடிக்கை என்ற பெயரில் மன உளைச்சலை அளித்தது எடப்பாடியின் அதிமுக அரசு.

இந்த நிலையில், ஜூன், ஜூலை அரசு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவதையொட்டி, அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் 4001 பேருக்கான பதவி உயர்வை ரத்து செய்துள்ளது அதிமுக அரசு. இந்த செய்கையை காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்துள்ளதாக ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories