தமிழ்நாடு

தண்ணீர் தட்டுப்பாடு - ரயிலில் ஏ.சி பயன்பாட்டை குறைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு!

சென்னையில் தண்ணீர் தட்டுப்படை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி பயன்பாட்டை குறைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு - ரயிலில் ஏ.சி பயன்பாட்டை குறைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை விஸ்பரூபம் எடுத்ததன் விளைவு தலைநகர் சென்னையையும் பெரிய அளவில் பாதித்தித்துள்ளது. தண்ணீர் தேவைக்காக மக்கள் கஷ்டப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் தண்ணீர் தட்டுப்படை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியை குறைக்க திட்டமிட்டிருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகி ஒருவர் கூறியதாவது; "தண்ணீர் சிக்கனத்தை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயிலில் குளிர்சாதன வசதியை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளனர். சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயிலுக்காக தினமும் 9000லிட்டர் தண்ணீர் செலவழிக்கப்படுகிறது. இதில் 80 சதவீதம் மெட்ரோ ரயிலின் குளிர்சாதனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தண்ணீரை சிக்கனப்படுத்த படிப்படியாக ஏ.சி. அமைப்பு முறையை மாற்றப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

தண்ணீர் தட்டுப்பாடு - ரயிலில் ஏ.சி பயன்பாட்டை குறைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு!

”மக்கள் அதிகம் பயணிக்காத 5 மணி நேரத்தை தேர்வு செய்து ஏ.சியை நிறுத்திவைக்க திட்டமிட்டிருக்கின்றோம். 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைகளில் ரயில்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய முடிவு எடுத்துள்ளோம். இதன்முலம் ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலும் சுமார் 30% தண்ணீரை சேமிக்க முடியும்.” என்றார் அவர்.

மேலும், தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணாமாக மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள், தொந்தரவாக எண்ண மாட்டார்கள், என மெட்ரோ நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories