தமிழ்நாடு

மக்களவை, சட்டப்பேரவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் கூடுதல் பலம் பெறுகிறது தி.மு.க !

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் தி.மு கழகத்துக்கு 1 மாநிலங்களவை இடம் கூடுதலாக கிடைத்துள்ளது.

மக்களவை, சட்டப்பேரவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் கூடுதல் பலம் பெறுகிறது தி.மு.க !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்.,18 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 23ல் நடைபெற்றது.

இதில் தி.மு கழகம் 22ல் 13 தொகுதிகளில் வென்று மாபெரும் வெற்றியைச் சந்தித்துள்ளது. இந்த 13 தொகுதிகளில் அ.தி.மு.க வசம் இருந்த 12 தொகுதிகளை கைப்பற்றி இருப்பது தி.மு.க.,வினரிடையே பெரும் மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் தி.மு.கவின் பலம் 101 ஆகவும் கூட்டணி கட்சி சேர்த்து 110 ஆகவும் உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் ஜெயித்ததால் 1 மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் தி.மு.கவுக்கு ஏற்கெனவே உள்ள 2 ராஜ்ய சபா எம்.பிக்களுடன் கூடுதலாக ஒரு எம்.பி நியமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆகையால் ஏற்கெனவே வாக்களித்தப்படி, ம.தி.மு.கவின் வைகோவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு அளிக்கப்படும். மீதமுள்ள 2 உறுப்பினர்கள் யார் என்பதை தி.மு.கவின் தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories