தமிழ்நாடு

மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி !

மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, ஒரு பூத்தில் 301 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஆனால் விவிபேடில் 504 என காண்பிப்பதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 22 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் நாகராஜன், திமுக வேட்பாளர் இலக்கியதாசனைவிட 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் இளையான்குடி பி அய்யம்பட்டி 299 பூத்தில் 301 ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஆனால் விவிபேடில் 504 என காண்பிப்பதால் திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் விவிபேட்டில் பதிவான வாக்குகளை பரிசோதித்து வருகிறார்..

ஆனால் இது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இயந்திரம் வைத்திருக்கும் அறைக்கு எப்படி வந்தது என்றும் 299-ம் இவிஎம் இயந்திரம் எங்கே என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

banner

Related Stories

Related Stories