தமிழ்நாடு

அறிவிக்கப்படாத அவசரநிலையில் தூத்துக்குடி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து முதலாம் ஆண்டு நினைவு நாளை எட்டிய பின்னரும், அந்த மாவட்டத்தில் மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் எடப்பாடி அரசின் போக்கு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

அறிவிக்கப்படாத அவசரநிலையில் தூத்துக்குடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு இதே நாளில் (மே 22) அமைதியான முறையில் பேரணி சென்ற மக்கள் மீது அடிமை அதிமுக அரசால் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. இதனால் மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் கொடிய தடியடி தாக்குதலுக்கும் ஆளாகினர்.

இக்கொடிய தாக்குதலுக்கு பின்னரும், அப்பகுதி மக்கள் இன்றளவும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு ஆண்டு கடந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்துவதற்கு கூட தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் இன்று நடைபெற இருந்த நினைவு கூட்டத்திற்கு செல்ல முற்பட்ட அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு தலைவர் சுப. உதயக்குமாரை எடப்பாடியின் போலீசார் கைது செய்துள்ளனர்.

அறிவிக்கப்படாத அவசரநிலையில் தூத்துக்குடி!

துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை சிபிஐ வசம் இருந்தும் கூட, தமிழக அரசும் எடப்பாடியின் போலீசாரும் சுப.உதயக்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கும், வேதாந்தாவுக்கும் ஆதரவாகவே அதிமுக அரசு செயல்பட்டு வருவது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது.

அ.தி.மு.க. அரசின் கடும் ஒடுக்குமுறையில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க மக்கள் இயக்கமே ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories