தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் , கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.
தேவைக்கேற்ப பாடநூல்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். விலையில்லா பாடநூல்கள் குறைவாக பெறப்பட்டிருப்பின் உரிய படிவத்தில் கூடுதல் தேவைப்பட்டியலை உரிய பாட தலைப்பு வாரியாக பள்ளி கல்வி இயக்ககத்தில் கோரி பெற வேண்டும். அந்த விவரத்தை வரும் 31 ஆம் தேதி அன்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.