தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை அன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

மே 23ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் நாள் முழுவதும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என சத்ய பிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை அன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என அனைத்திற்கும் மே 19ம் தேதியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தன.

இந்த நிலையில் மே 23ம் தேதியான நாளை மறுநாள் நாடுமுழுவதும் நடந்த 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன.

இவ்வாறு இருக்கையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மே 23 அன்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நள்ளிரவு 12 மணிவரை மூட வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories