கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பாகாவே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தொடங்கிவிட்டது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்தே காணப்படுகிறது.
இதற்கிடையில், ஃபானி புயல் ஏற்படுத்திய வெப்பத்தின் தாக்கத்தால் தண்ணீரின் தேவையும் அதிகரித்துவிட்டது. இதனால் செய்வதறியாது, சென்னை வாசிகள் அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர்.
இதுபோக, கடந்த வடகிழக்கு பருவமழையும் பொய்த்துவிட்டதால் நீர்நிலைகள் வறட்சி அடைந்துவிட்டன. இதனால் மக்கள் நள்ளிரவு, அதிகாலை என பாராமல் தண்ணீருக்காக அல்லல்படுகின்றனர்.
குறிப்பாக ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்பும் இல்லாததால், குடிநீர் தட்டுப்பாடு குறித்து யாரிடம் புகார் அளிப்பது என தெரியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
அவ்வகையில், குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக புகார் அளிப்பதற்கு வசதியாக சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் புகார் அளிக்க உதவி எண்களை குறிப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்.
குடிநீர் தட்டுப்பாடு குறித்த புகார் அளிக்க கீழ்காணும் எண்ணுக்கு அழைக்கலாம்:
சேப்பாக்கம் - 9444071150
திருவல்லிக்கேணி - 9840091488
திமுக எம்.எல்.ஏ அன்பழகனின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.