தமிழ்நாடு

13 வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு தேவை: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளுக்கும் மே 19 அன்று மறுவாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அப்போது, கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

 13 வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு தேவை: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19-ம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டவை என அனைத்தும் மே 23ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில், தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 3 வாக்குச்சாவடிகளும் பதற்றம் வாய்ந்தவையாக உள்ளதாலும், ஏற்கெனவே பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் சிசிடிவி கேமிரா வைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories