2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் தமிழகத்தை உலுக்கியது. இதில் குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர் பகுதி பலத்த தேசாரத்தை சந்தித்தத. இந்த சேதாரத்தால் பலர் வீடுகள் மற்றும் விவசாய பயிர்கலை இழந்தனர். உயிர் சேதமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு போராடினர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதோடு மட்டுமல்லாமல் 140-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இந்த சம்பவம் அடிப்படை கோரிக்கைகளை கேட்டு போராடுபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த செய்ததாக மக்கள் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பின் ஓய்ந்து நிலைமை மாறிய போதும் மக்கள் சிலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்தாக மக்கள் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் போராடிய 140 மீது வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி இனியன் என்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "அடிப்படை தேவைக்காக நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசாரிக்க தடைவிதிக்க வேண்டும்" என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.