சென்னை தி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொது செயலாளர் மருத்துவர்.ரவீந்தரநாத் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,
"மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்ததற்கு மிகவும் வருத்தம் தெரிவிக்கின்றோம். தமிழக அரசு மருத்துவமனைகள் மிக மோசமான சேவையை வழங்கி வருகிறது.
மருத்துவமனைகளில் தண்ணீர் வசதி இல்லை,நவீன தொழிநுட்பம் இல்லை, இதனால் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் முன் அறிவிப்பு இல்லாத மின்வெட்டு நடந்து வருகிறது. அவ்வளவு பெரிய மருத்துவமனையில் ஜெனரேட்டர் வேலை செய்யாதது வெக்க பட வேண்டிய விஷயம். நடந்த முழு நிகழ்வையும் சோற்றில் முழு பூசணிக்காய் மறைப்பது போல தமிழக அரசு மறைக்கிறது.
அரசு நவீன வசதியை மருத்துவமனைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். அவசர பிரிவுகளுக்கு தனியாக ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு தண்ணீர் முறையாக வழங்க படுகிறது.ஆனால் மருத்துவமனைக்கு கொடுக்க மட்டும் தட்டுப்பாடாக இருக்கிறது.
தமிழக அரசு தண்ணீர்,மின்சாரம்,மருந்துவம் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக அரசு மருத்துவ மனைகளுக்கு வழங்க கோரிக்கை வைக்கிறோம்.எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் வரும் 15ம் தேதி அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.