தமிழ்நாடு

அவதூறு செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ : நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ்!

அவதூறு செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ குழுமத்திடம் நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவதூறு செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ : நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் ‘ஜுனியர் விகடன்’ இதழில் பொய்ச் செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன் ‘ குழுமத்தின் அச்சகம் மற்றும் வெளியீட்டாளருக்கு நஷ்டஈடு கோரி வழக்கறிஞர் ரிச்சட்ஸ் வில்சன் ‘வக்கீல் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில், கடந்த ‘ஜுனியர் விகடன்’ இதழில், பொய்ச் செய்தியை வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் அச்சகம் மற்றும் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.பி.சீனிவாசன், இயக்குநர்களான திருமதி ராதிகா சீனிவாசன், திரு. குமார் மன்னோர் வெங்கடேஸ்வரா, ஆனந்தவிகடன் பதிப்பகத்தின் ஆசிரியர் திரு.எஸ்.அறிவழகன் மற்றும் ஜுனியர் விகடன் இதழின் செய்தி ஆசிரியர் திரு. பாலகிஷன் ஆகியோருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் வில்சன் அசோசியேட்ஸின் வழக்கறிஞர் ரிச்சட்ஸ் வில்சன், நஷ்டஈடு கோரி “வக்கீல் நோட்டீஸ்” அனுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories