தமிழ்நாடு

43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவு !

மறு வாக்குப்பதிவு நடைபெறும் 3 வாக்குச்சாவடி தவிர 43 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவின் போது 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்தது. இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் அடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார். எனவே, இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்தார்.இதையடுத்து, தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மறுவாக்குப்பதிவு நடக்கவிருக்கும் 3 வாக்குச்சாவடிகள் தவிர, இதர 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைசீட்டுகளை எண்ணிக் கணக்கிடுமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ, 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது; வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் ஒப்புகைச் சீட்டை எண்ணும்போது தெரிந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், ஒப்புகைச்சீட்டு எண்ணும்போது சந்தேகம் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும் என்றும், 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டுகள் அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், மாதிரி வாக்குகளை அழிக்காததால் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories