தமிழ்நாடு

விளைச்சலுக்கு நீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறையை நாடிய விவசாயிகள்!

நெற்பயிர் விளைச்சல் நடைபெற்றுவரும் நிலையில் திடீரென நீர்வெளியேற்றம் நிறுத்தப்பட்டதால் ஈரோடு விவசாயிகள் வேதனை.

விளைச்சலுக்கு நீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறையை நாடிய விவசாயிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கூகலூர் பகுதியில் ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

95% விளைச்சல் கண்ட நிலையில் 5% விளைச்சலே உள்ள நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது கடந்த ஏப்.,30-ம் தேதியே நிறுத்தப்பட்டது.

ஐ.ஆர்.20 ரக நெற்பயிர்கள் எஞ்சிய சதவிகித விளைச்சலை அடைய குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகும். ஆனால், திடீரென பவானி சாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

விளைச்சலுக்கு நீர் திறக்கக் கோரி பொதுப்பணித்துறையை நாடிய விவசாயிகள்!

இந்நிலையில், மேலும் 10 நாட்களுக்கு அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி கூகலூர் விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாயிகளின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

banner

Related Stories

Related Stories