தமிழ்நாடு

எழுவர் விடுதலை - ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு!  

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்குமாறு தமிழக ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எழுவர் விடுதலை - ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு!  
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கும்படி, தமிழக ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன் மீது ஆளுநர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

Nalini
Nalini

இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி நளினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழு மாதங்கள் கடந்தும் அந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

20 ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவாக தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை, மனிதாபிமான அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக 1994-ம் ஆண்டு தமிழக அரசு வகுத்த திட்டத்தின் அடிப்படையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட 2000-ம் ஆண்டுக்குப் பின் 3 ஆயிரத்து 700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories